Monday, June 6, 2016

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer 3

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்

உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்..

பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..

பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்

கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்

கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்

நல் வாழ்வை அளிக்கும் மெய்ஞான ஒளி வீசட்டும்

நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்..

வாழ்க வையகம் ...வாழ்க வளமுடன்

கவலை சினம் ஒழிக்க வழி

சினம் கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச்

சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.

மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்

மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்.

தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி

சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு

இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்

என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்
.

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer 2

ஆதியென்னும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று

அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி ,

மோதி இணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப

மூலகங்கள் பலவாகி அவையிணைந்து

பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி

நீதி நெறி உணர் மாந்தாராகி வாழும்

நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்
.